திண்டிவனத்தில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

84பார்த்தது
திண்டிவனத்தில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
கோடை விடுமுறை முன்னிட்டு ராமன் ரெட்டி தெலுங்கு பாடசாலையில் தெலுங்கு பயின்ற 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று முன்தினம் மாலை திண்டிவனம் ஆரியாஸ் ஹோட்டலில் நடந்தது. ஆர்யாஸ் ஓட்டல் உரிமையாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் சென்னை பெருநகர மண்டல தலைவர் ஜெயராமன் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி இணையதள பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். விழாவில் ரெட்டி நல சங்க நிர்வாகிகள் சிதம்பரனார், வழக்கறிஞர் கிருபாகரன், கபீர்தாஸ், புண்ணியமூர்த்தி, மேதாவி, கார்த்திக், பாபு, தீனதயாளன், முத்துகிருஷ்ணன், புருஷோத்தமன், ராம்குமார், வைத்தியநாதன், தெலுங்கு ஆசிரியை புஷ்பாபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி