விழுப்புரம்: மயிலம் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு; போலீஸ் சோதனை
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் --- பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6: 30 மணியிலிருந்து இரவு 8: 15 மணி வரை, டி. எஸ். பி. , அழகேசன் தலைமையில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத பணம் 1. 20 லட்சம் ரூபாய் மற்றும் சில ஆவணங்கள் சிக்கின. இதுதொடர்பாக, சார் - பதிவாளர் வெங்கடேஸ்வரியிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை 7: 00 மணிக்கு, திண்டிவனம், ஜெயபுரம் மூன்றாவது தெருவில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிக்கும் சார் - பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், நேற்று மதியம் சோதனை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.