மயிலம் அடுத்த பாலப்பட்டு கிராமத்தில் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி அஞ்சலை, 65; இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, திண்டிவனம் மார்க்கத்திலிருந்து விழுப்புரம் சென்ற மாருதி ஆல்டோ கார் அஞ்சலை மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அஞ்சலை சம்பவ இடத்திலேயே இறந்தார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.