மயிலம் மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா

162பார்த்தது
மயிலம் மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா
மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி என். எஸ். எஸ். , மாணவர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கி மரம் நடுவதன் அவசியம் குறித்து பேசினார். பள்ளி தலைமையாசிரியர் பழனி, வட்டார மருத்துவ மேற்பார்வையில் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பஞ்சாட்சரம் வரவேற்றார். டாக்டர்கள் ஹேமலதா, பாரதிதாசன் மருந்தாளுனர் குமார், அலுவலக பணியாளர்கள் செல்வி, அருண் ஜோதி, பிரபாகர், ராஜேஷ், சுகாதார ஆய்வாளர் மோகனகிருஷ்ணன், பெரும்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜன், பிரசாமுண்டா அறக்கட்டளை நிறுவனர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி