கேரளாவில் அவ்வப்போது சாலைகளில் காட்டு விலங்குகள் உலா வரும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மிக அண்மையில் அங்குள்ள ஒரு முக்கியமான சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை நடுரோட்டில் நின்றது. இதை பார்த்த பயணிகள் திகிலடைந்தனர். ஆனால் நிலைமையை சாதுர்யமாக கையாண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸில் இயக்கி பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றினார்.