தபால் வாக்குகள் பெறும் பணி இன்று துவக்கம்

64பார்த்தது
விழுப்புரம் பாராளுமன்ற (தனி) தொகுதிக்குட்பட்ட திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராம மற்றும் நகராட்சி பகுதியில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் 835 பேர் கண்டறியப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த நபர்களின் வீடுகளுக்கே சென்று அஞ்சல் வாக்கு பெற 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வாக்குப் பெரும் அலுவலர் தலைமையில் மைக்ரோ அப்சர்வர், உதவியாளர், வீடியோகிராபர் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர் என 5 பேர் இடம் பெறுவர்.
இவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

முன்னதாக திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்கு சேகரிக்கும் பெட்டிகள் திறந்து காட்டப்பட்டு, பின்னர் அந்தப் பெட்டிகளுக்கு சீல் இடப்பட்டது.

மேற்படி வாக்கு சேகரிக்கும் குழுக்கள் சார் ஆட்சியர் திவ்யன் ஷூ நிகம் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டனர். வாக்கு சேகரித்த பின்னர் இக்குழுவின் ஒவ்வொரு நாளும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் திண்டிவனம் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் விலக்கப்பட்டு அவை எண்ணப்பட்டு பிரதான சேகரிக்கும் வாக்குப் பெட்டியில் வைக்கப்படும்.
இந்த பத்து குழுவினரும் வரும் 8ம் தேதி வரை தபால் ஓட்டுகளை சேகரிப்பார்கள்.

தொடர்புடைய செய்தி