வாகனத்தின் மீது பாய்ந்த யானை - பெண் பலி (வீடியோ)

60பார்த்தது
ஆப்பிரிக்காவில் உள்ள காஃப்யூ தேசிய பூங்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி வாகனத்தின் மீது யானை ஒன்று சீறிப்பாய்ந்து சேதத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், சுற்றுலா பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர். சில சுற்றுலாப் பயணிகள் யானைகளை படம் பிடித்துக் கொண்டிருந்த போது, ​​ஒரு யானை சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சுற்றுலா லாரியை துரத்தியது. பின்னர், லாரியை தாக்கி கீழே தள்ளியது. இச்சம்பவத்தில் 80 வயதான அமெரிக்கப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி