பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு

82பார்த்தது
பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு
அகமதாபாத்தில் நடந்து வரும் குஜராத் - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக விளையாடியது. கில் 89* ரன் (48 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாச குஜராத் 20 ஓவரில் 199-4 ரன் குவித்தது. சாய் சுதர்சன் 33, வில்லியம்சன் 26, தெவாடியா 23* ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களில் ரபாடா, ஹர்ஷல் படேல், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பஞ்சாபின் இலக்கு 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி