பணி நிறைவு பாராட்டு விழா சவுமியா அன்புமணி பங்கேற்பு

67பார்த்தது
திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரின் பணி நிறைவு பாராட்டு விழாவில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பங்கேற்றார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வியின் பணி நிறைவு பாராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக செவிலியர் தமிழ்ச்செல்வியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பசுமைத்தாயக அமைப்பின் தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளருமான சௌமியா அன்புமணி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட மருத்துவத்துறை இணையக்குளர் லட்சுமணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்ராஜ், திண்டிவனம் அரசு மருத்துவர்கள் ரவிச்சந்திரன் முரளி ஸ்ரீ பாரதி மற்றும் செவிலியர்கள் உட்பட பலன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி