திருச்சி திருவெறும்பூரில் உள்ள என்ஐடி கல்லூரி விடுதி அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவிக்கு ஊழியர் கதிரேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விடுதியின் 3 காப்பாளர்களை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்ற மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.