வடிகால் வசதி இல்லாததால் கடைக்குள் புகுந்த மழைநீர்

73பார்த்தது
திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வடிகால் வசதி சரிவர அமைக்கப்படாததால் கடைகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திண்டிவனம் அதன் சுற்று வட்டார பகுதிகளான மயிலம், கூட்டேரிப்பட்டு, செண்டூர், ஆலகிராமம், தென்பசியார், ஜக்காம்பேட்டை, தீவனூர், ஒலக்கூர், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இப்பகுதியில் மின் விநியோகமும் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி சரிவர செய்யப்படாததால் மழை நீர் அங்குள்ள பாத்திரக்கடைக்குள் புகுந்தது. கடைக்குள் புகுந்த மழை நீரை ஊழியர்கள் நீண்ட நேரம் வெளியேற்றினர். மழை தொடர்ந்து பெய்ததால் மழை நீரானது கடைக்குள் புகுந்தது. கடைக்குள் தேங்கிய மழை நீரில் நின்றபடியே வாடிக்கையாளர்கள் பாத்திரங்கள் வாங்கிச் சென்றனர். கூட்டேரிப்பட்டு பகுதி முழுவதும் குப்பை குளங்கள் அகற்றப்படாமல் ஒருபுறம் காட்சியளிக்க மறுபுறம் மழை நீர் வடிகால் வசதி சரிவர செய்யப்படாததால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுப் பரவும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி