ரீல்ஸ் மோகம்: குழந்தையை கீழே போட்ட பெண் (வீடியோ)

60பார்த்தது
சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்கிற ஆசையில் சிலர் எல்லை மீறி நடந்து கொள்கின்றனர். அதுபோலத்தான் தற்போது வெளியாக இருக்கும் வீடியோவில், ஒரு பெண்மணி குழந்தையை இடுப்பில் வைத்து நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். நடன ஆர்வத்தில் ஒரு கட்டத்தில் குழந்தையின் கையை அவர் விட்டு விட, குழந்தை தலைக்குப்புற விழுந்து வலியால் அழத் தொடங்குகிறது. ஆனால் அந்த பெண்மணி எந்த வருத்தமும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் “குரங்கு கையில் சிக்கிய பூமாலை” என பகிர்ந்து வருகின்றனர்.