திண்டிவனம் வட்டம், கடவம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்நாத் மற்றும் ஏழுமலை ஆகியோரிடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறாம். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அனந்தராமன் மகன் செங்குட்டுவன், மரக்காணம் ஏந்தூர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகிய இருவரும் சேர்ந்து விவசாய நிலத்தில் இருந்த 35 பனை மரங்களை வெட்டி சேதப்படுத்தி விட்டனராம். இதுகுறித்து கடவம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் செங்குட்டுவன், பாலு ஆகியோர் மீது ஓலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.