அரியந்தாங்கல் கோவிலில் 15ம் ஆண்டு சூரசம்ஹார விழா

55பார்த்தது
மரக்காணம் அடுத அரியந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்காம்பிகை ஆலயத்தில் நடைபெற்ற 15 ஆம் ஆண்டு சூரசம்ஹார விழா

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள அரியந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ விஷ்ணு துர்க்காம்பிகை ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை பவுர்ணமி அன்று உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் விஷ்ணு துர்க்கை அம்மன், சும்பன், நிசும்பன் மகிஷாசூரன் ஆகிய மூன்று அரக்கர்களை வதம் செய்து கொல்லும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியினை கண்டு களித்தனர். இதில் முக்கிய அம்சமாக குழந்தை இல்லா தம்பதியர்கள் மற்றும் நீண்ட நாட்களாக திருமணமாகாத கன்னிப்பெண்கள் ஆகியவருக்கு அம்மனின் மடியில் வைக்கப்பட்டிருந்த எலுமிச்சம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழத்தை பெற்று சென்றால் குழந்தையின்மை மற்றும் திருமணத்தடை நீங்கும் என்று சுற்று வட்டாரப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி