அவலூர்பேட்டை அடுத்துள்ள, கோவில்புரையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30 ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருடன் முருகையன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். கோவில்புரையூர் அருகே வந்த பொழுது பின்னால் வந்த வேன் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்த திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சந்தோஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நேற்று அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.