விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெய்குப்பி ஊராட்சியில் ஒன்றியக் கவுன்சிலர் மனோ சித்ரா ஏற்பாட்டில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி தமிழக முன்னாள் அமைச்சர் திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.