ஒரு ஏக்கரில் டிராகன் பழம் பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு 40% மானியத்தை அரசு வழங்குகிறது. 1 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவாகும். பின்னர் இந்தத் தொகையில் 40%-தை 2 தவணைகளில் மானியமாக அரசு வழங்குகிறது. இதன்மூலம், ஒரு விவசாயி ஒரு பருவத்தில் 2.5 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக வறண்ட பகுதிகளில் இது நன்றாக விளைகிறது.