தமிழக அரசு மின்மோட்டார் பம்புசெட்டு மானியத் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணறுக்கு புதிய பம்புசெட்டு அமைப்பதற்காக மானியம் வழங்கப்படுகிறது. 4 ஸ்டார் தரம் கொண்ட பம்புசெட் வாங்க அதிகபட்சமாக ரூ.15,000 அல்லது பம்புசெட்டின் மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்படும். மேலும், பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின்மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும் மானியம் வழங்கப்படுகிறது.