ஐபிஎல் தொடரின் நாளைய ஏப்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது. இந்த போட்டியில், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உருவான பச்சை நிற ஆடையை அணிந்து பெங்களூரு அணியினர் விளையாட உள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் தேவை மற்றும் இயற்கையை பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முன்னெடுப்பை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.