திமுக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன், இன்று (ஏப்ரல் 11) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக ரவிச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகும் படி ரவிச்சந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.