விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார சுகாதார பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் யோகபிரியா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரம ணியன் முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ண தாஸ் வரவேற்றார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு வட்டார சுகாதார பேரவையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்து ஊராட்சிகள் மற்றும் செஞ்சி, அனந்தபுரம் பேரூராட்சி களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அனைத்து துறை அலுவ லர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து செஞ்சி ஒன்றியத்தில் பழுதடைந்த துணை சுகாதார நிலையங்களை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டி கொடுப்பது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுற்றுசுவர் கட்டுவது, கெங்கவரம் மருத்துவமனையில் செவிலியர் குடியிருப்புகள் கட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் டயானா, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகம், அருண்குமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.