செஞ்சியில் நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில் ரூ 1 கோடியே 69 லட்சம் மதிப்பில் பணிகளை தேர்வு செய்துள்ளனர்.
செஞ்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமையில் நடந்தது. பி. டி. ஓ. , க்கள் சீத்தாலட்சுமி, முல்லை முன்னிலை வகித்தனர். மேலாளர் பழனி வரவேற்றார்.
இதில் ரூ. 1 கோடியே 69 லட்சம் மதிப்பில் தார் சாலை, கழிவு நீர் கால்வாய், உலர்களம், தடுப்பு சுவர் உள்ளிட்ட 39 பணிகளை தேர்வு செய்தனர். துணை சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர்கள் பச்சையப்பன், கேமல், சீனுவாசன், அன்னம்மாள், செண்பகப்பிரியா, துரை, டிலைட் ஆரோக்யராஜ், புவனா, ஞானாம்பாள், மல்லிகா, பனிமலர், உமாமகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ஒன்றியத்தில் உள்ள கூரை வீடுகளை கணக்கெடுத்து ரூ. 3. 50 லட்சம் மதிப்பில் கான்கிரிட் வீடுகளாக மாற்றப்படும். இதற்காக ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தி பயனாளிகள் தேர்வு செயயப்பட்டுள்ளனர். விரைவில் செஞ்சி ஒன்றியம் கூரை வீடுகள் இல்லாத ஒன்றியமாக மாறும் என கூறினார்.