ராஜ்கோட்: அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 435 ரன்கள் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பிரதிகா ராவல் 154, ஸ்மிருதி மந்தனா 135 ஆகியோரின் அபார ஆட்டத்தால் 435/5 என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. இதுவே ஒருநாள் போட்டிகளில் இந்திய (ஆடவர் அல்லது மகளிர்) அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். ஆடவர் அணி 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 418/5 குவித்ததே ODI-ல் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.