உ.பி: மிர்சாபூரில் ஆட்டோ டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டோவில் பயணம் செய்த மாணவிகளிடம் ஆட்டோ டிரைவர் கட்டணம் கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் மாணவிகள் என்று கூறி கட்டணம் தர மறுத்துவிட்டனர். அவர் தொடர்ந்து கட்டணம் கேட்டபோது, மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதை வீடியோவாக எடுத்து, இன்ஸ்டாவில் ஆட்டோ டிரைவர் ஆபாசமாக பேசினார் என்று கூறி பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.