ரெடிட் சமூக வலைத்தளத்தில் பயனர் ஒருவர் தான் 3 நிமிடங்களுக்கு உயிரிழந்து பின் மீண்டும் உயிர் பெற்ற சம்பவத்தை விவரித்துள்ளார். அதிக அளவு போதைப் பொருள் எடுத்துக்கொண்டதால் மயக்கமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்சில் ஏற்றியபோது அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். அவரின் உயிர் பிரிந்த அந்த 3 நிமிடங்களில், அதீத குளிர்ச்சி, இருட்டான நரகத்தைப் போன்ற இடத்தை உணர்ந்ததாகவும், பின்னர் உயிர் பெற்று திரும்பியதாக கூறியுள்ளார்.