இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

52பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் பொன்முடி மகளிர் அணி நிர்வாகி தேவி பாலமுருகன் , விழுப்புரம் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், மனோ ரமேஷ் , அழகர், ஐயப்பன், குபேந்திரன் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி