அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் படுகாயம்

552பார்த்தது
அரியலூர் மாவட்டம், அணிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் என்பவர் சென்னையில் இருந்து அரசு பேருந்தை அரியலூருக்கு ஓட்டி வந்தார். பேருந்தில் பெரம்பலூர் மாவட்டம், நல்லரிக்கை கிராமத்தைச் சேர்ந்த ஆனமுத்து நடத்துனராக உடன் வந்தார். பேருந்தில் 5 பெண் பயணிகள் உள்ளிட்ட 45 பேர் பயணம் செய்தனர். பேருந்து திண்டிவனம் அடுத்த பாஞ்சாலம் கூட்டு சாலை பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது முன்னாள் சென்ற டேங்கர் லாரி திடீரென்று பிரேக் போட்டதால் அதன் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் பிரகதீஸ்வரன் பேருந்தை இடது புறமாக திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அரசு பேருந்து சாலையோரத்தில் உள்ள சிறிய பாலத்தின் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஐந்து பெண் பயணிகள் உட்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர். பலருக்கு கால் மற்றும் கைகளில் முறிவு ஏற்பட்டது.

விபத்தில் காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் 9 பேர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி