தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (டிச., 14) பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நாளை (டிச., 15) மீண்டும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.