2026இல் வெற்றி நமதே - அன்புமணி ராமதாஸ்

51பார்த்தது
2026இல் வெற்றி நமதே - அன்புமணி ராமதாஸ்
2026இல் வெற்றி நமதே, மன உறுதியுடன் இலக்கை நோக்கி வீறுநடை போடுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கட்சியினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “வெற்றியை சுவைக்க முடியாதது வருத்தமடைய செய்யும் என்றாலும் இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைய ஒன்றுமில்லை. தேர்தல் போரில் வெற்றியை இழந்தோமே தவிர களத்தை இழக்கவில்லை. களம் நமக்கு சாதகமாகவே இருக்கிறது. 2026 சட்டசபை தேர்தல் களம் முழு சாதகமாக இருக்கிறது. அதில் பாமக ஆட்சியமைப்பது தான் இலக்கு" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி