அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம்.. என் மீது கை வையுங்கள்

12537பார்த்தது
அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம்.. என் மீது கை வையுங்கள்
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இதனிடையில் அண்ணாமலையின் படத்தை ஒரு ஆட்டின் கழுத்தில் மாட்டி, படத்தோடு சேர்த்து ஆட்டை வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம். கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள். நான் கோவையில்தான் இருக்கப் போகிறேன்" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி