தேசிய ஜனநாயக கூட்டணியில் சபாநாயகர் பதவியை கேட்ட தெலுங்கு தேசத்தின் கோரிக்கையை தற்போது பாஜக நிராகரித்துள்ளது. பாஜகவை சேர்ந்த ஒருவரையே சபாநாயகராக நியமிக்க அமித்ஷா மற்றும் ஜே.பி நட்டா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை இல்லமால் கூட்டணி தயவில் ஆட்சி அமைக்கும் சூழலில், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு போன்றவற்றின் போது சபாநாயகரின் முடிவும், அவரின் வாக்கும் ஆட்சி மாற்றத்தையே தீர்மானிக்கும் என்பதால் சபாநாயகர் தேர்வில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என பாஜக முடிவு செய்துள்ளது.