விபரீதத்தில் முடிந்த தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்... வீடியோ...

55பார்த்தது
ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தெலுங்கு தேச தொண்டர்களின் வெற்றிக் கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்துள்ளது. மல்பூர் கிராமத்தில் ட்ராக்டர் சாகசம், பைக் சாகசம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச தொண்டர்கள் பின்னிருந்தவரை கவனிக்காமல் ட்ராக்டரை பின்புறமாக இயக்கியதால், தொண்டர் மீது ட்ராக்டர் ஏறியது. இதில் படுகாயமடைந்த தொண்டர், எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி