வேங்கைவயல் சம்பவம்: நீதிமன்றத்தில் போலீசார் அளித்த உறுதி

77பார்த்தது
வேங்கைவயல் சம்பவம்: நீதிமன்றத்தில் போலீசார் அளித்த உறுதி
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் அதிர்வலையை கிளப்பியது. இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ராஜ்கமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும் என காவல்துறை தெரிவித்திருப்பதாக கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி