கோயம்புத்தூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (ஏப்ரல் 16) ‘கோவை ரைசிங்’ என்ற பெயரில் கோவைக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், “ஜவுளித் துறையில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் நவீன மயமாக்க அரசு மானியங்கள் மூலம் ஊக்குவிக்கப்படும், கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும், கோவையில் புதிய IISC., IIM., ஆகியவை தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” உள்ளிட்டவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.