வேலூர் சத்துவாச்சாரி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவன் ஆகாஷ் குமார் என்பவரை தலைமை ஆசிரியர் சீனிவாசன் என்பவர் தாக்கியதால் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு, வேலூர் அரசு பெண்ட்லண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
சிறுவனின் சித்தப்பா சதீஷ் என்பவர் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக சத்துவாச்சாரி காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி தரப்பிலும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவன் தொடர்ந்து சில மாணவர்களுடன் சேர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால் தலைமை ஆசிரியர் அடித்து கண்டிக்க முயன்ற போது தவறுதலாக முகத்தில் அடி விழுந்தது தெரியவந்துள்ளது. மேலும் இரு தரப்பினரிடையே நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இருவரும் சமாதானம் அடைந்தனர்.