ஹரியானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பாபரியா ராஜினாமா

66பார்த்தது
ஹரியானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பாபரியா ராஜினாமா
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பாபரியா ராஜினாமா செய்துள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்றும், உடல்நிலை காரணமாகவும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48, காங்கிரஸ் 37, ஐஎன்எல்டி 2, சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி