தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கும் நிலையில் மேற்கு, வடமேற்கு நோக்கி மேலும் வலுவடையும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை நோக்கி வந்து பின்னர் ஓமன் நோக்கி சென்று வலு குறையும்.