சென்னைக்கு வரும் 16ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக இன்றே (அக். 14) வேளச்சேரி மேம்பாலத்தில் கார் உரிமையாளர்கள் பார்க்கிங்கிற்கு இடம் பிடித்து தங்களது கார்களை வரிசையாக நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கார்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் காரை உடனடியாக எடுக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், கார்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.