வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று(செப்.2) வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வந்த வேலூர் மேல்பட்டி சொக்கரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வி அளித்துள்ள மனுவில், "எனது மகன் மணிகண்டன் (வயது 25 ) கடந்த 2022 -ம் ஆண்டு மலேசியாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் வேலைக்கு சென்றார்.
அங்கு ஓட்டலில் வேலை செய்து வந்தபோது கடந்த ஒரு வருடமாக என் மகனுக்கு அவருடைய முதலாளி மூலமாக தொல்லைகள் இருப்பதாகவும் எங்களுடைய ஊருக்கு வந்து விடுவதாகவும் கூறி அழுது கொண்டே இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நான் ஊருக்கு வந்து விடுகிறேன் என்று கூறினார். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை. அவருடைய தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மகன் உயிரோடு இருக்கிறானா என்று கூட தெரியல. ஏற்கனவே ஆட்சியரிடம் கடந்த 20ம் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்திருந்தேன். எனக்கு தயவு செய்து என் மகனை அழைத்து வந்து விட்டு விடுங்கள். அனைவரையும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.