வேலூர் வேலப்பாடி கிராம தேவதை ஆனைகுளத்தம்மன், படவேட்டம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் இன்று (மார்ச் 14) நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆனைகுளத்தம்மனுக்கு தங்கள் கைகளால் அபிஷேகம் செய்தனர். மேலும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து இரவு அம்மன் திருவீதியுலா நடக்கிறது. நாளை காலை 7.30 மணியளவில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.