இன்ஸ்டாகிராமில் Comment-களை Dislike செய்வதற்கான ஆப்ஷனை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன் ஒருவரின் பதிவுக்கு வரும் Comment-களை Like மட்டுமே செய்ய முடியும். தற்போது இந்த அம்சத்தை மெட்டா நிறுவனம் சேர்த்துள்ளது. அதே சமயம் இந்த ஆப்ஷன் கருத்துகளை பரிமாறுபவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.