தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு நிதி வழங்காத நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஷ் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அன்பில் மகேஷ் தனது தள பக்கத்தில், “ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு தரவேண்டிய நிதியை தராமல் ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இது தொடர்பான ஆவணங்களை துணை முதலமைச்சரிடம் சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.