பிரபல தென் கொரிய நடிகை கிம் சே ரன் (24) மரணமடைந்தார். இன்று (பிப்.16) சியோலில் உள்ள கிம் சே ரன்னின் வீட்டில் அவர் இறந்து கிடந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கிம் சே ரன் 2009 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தி பிராண்ட் நியூ லைஃப், தி நெய்பர்ஸ், சீக்ரெட் ஹீலர், தி வில்லேஜர்ஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.