ஆண்கள் வாரத்திற்கு 2 முறை உடலுறவு கொள்வது மாரடைப்பு அபாயத்தை 50% குறைக்க உதவும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 40 முதல் 70 வயது ஆண்களிடையே சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜியில் வெளியிடப்பட்ட 2010 ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் அமைந்துள்ளது. அதே போல், ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது 6 வாரங்களுக்கு உடலுறவில் ஈடுப்படக் கூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை அறிவுறுத்தியுள்ளது.