உதகை அரசு மருத்துவக் கல்லூரியை CM திறந்து வைக்கிறார்

51பார்த்தது
நீலகிரி: உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்., 06) திறந்து வைக்கிறார். ரூ.499 கோடி மதிப்பீட்டில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், இன்று திறப்பு விழா நடக்கிறது. 700 படுக்கை வசதியுடன், 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் 50 படுக்கை வசதியுடன் கூடிய தனி அறைகள் உள்ளன. இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்ட 2வது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதுவாகும்.

தொடர்புடைய செய்தி