அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

55பார்த்தது
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
உத்தர பிரதேசம்: அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ராமர் கோயில் நிர்வாகத்தின் இ-மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இதில், கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி