4 மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை மையம்

59பார்த்தது
4 மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை மையம்
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வடதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (ஏப்.16) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மதியம் 2.30 வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி