கர்நாடகா: சரண பசவேஸ்வராநகரை சேர்ந்த அமரேஷ் (30) - பூஜா (27) இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாமனார் தேவேகவுடா, மாமியார் சசிகலா, மைத்துனர் வீரண்ண கவுடா ஆகியோர் பூஜாவை கருப்பாக இருப்பதாக கேலி செய்துள்ளனர். இதனால், விரக்தியடைந்த பூஜா கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று (ஏப்.15) தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், பூஜாவின் பெற்றோர் தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது என குற்றம்சாட்டியுள்ளனர்.