போதைப் பொருள் பன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று மலையாள நடிகை வின்சி அலோசியஸ் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "சமீபத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த முன்னணி நடிகர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நேரடியாக பார்த்தேன். அந்த நடிகர் போதையில் என்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறினார். இதனால் தான் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்" என தெரிவித்துள்ளார்.