முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன், வக்ஃபு சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கும், ஆளுநருக்கு எதிரான தீர்ப்புக்கும் நன்றி தெரிவித்தார். திமுக கூட்டணி சார்பாக கமல்ஹாசன் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.